Home செய்திகள் போராட்ட வடிவத்தையே மாற்றியுள்ளோம்: மட்டக்களப்பில் கருணா

போராட்ட வடிவத்தையே மாற்றியுள்ளோம்: மட்டக்களப்பில் கருணா

80
0

போராளிகள் நாங்கள் ஒன்றிணைந்து போராட்ட வடிவத்தையே இன்று மாற்றியுள்ளதாகவும், எங்களிடம் ஆயுதம் மட்டுமே இல்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். 

மட்டு – திருப்பழுகாமத்தில் நடைபெற்ற,  மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையிலான பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு கூறுகையில்,

நாம் ஆயுதங்களை கைவிட்டு எமது போராட்ட வடிவத்தை மட்டுமே மாற்றியுள்ளோம். எமது இலட்சியம் ஒன்றாகவே இருக்கிறது. தமிழர்களுக்கு மறுக்கப்படும் உரிமைக்கா எமது குரல் ஓங்கி ஒலிக்கும்.

குறிப்பாக கிழக்கில் முஸ்லீம்களால் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் தடுத்து நிறுத்தப்படும், அபகரிக்கப்பட்ட நிலங்கள் முடிந்தவரையில் மீட்டெடுக்கப்படும். கிழக்கில் தமிழர்கள் ஒதுக்கப்படுவதை, அடக்கி ஆழ முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. என்றார்.