Home செய்திகள் வாக்குப் பெட்டிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடு: தேசப்பிரிய

வாக்குப் பெட்டிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடு: தேசப்பிரிய

47
0

ஆகஸ்ட் 5ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை தொடர்ந்து வாக்குகள் எண்ணப்படும் வரையில் வாக்குப் பெட்டிகளுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கையெடுத்துள்ளதாக அதன் தலைவர் மஹிந்த தேஸப்பிரிய தெரிவித்துள்ளார்.

5ஆம் திகதி மாலை 5 மணியுடன் வாக்கெடுப்பு முடிவடையவுள்ளதுடன் அதன்பின்னர் மறுநாள் 6ஆம் திகதி காலை முதலே வாக்குகள் எண்ணப்படவுள்ளதனால் அந்தக் காலப்பகுதியில் வாக்குப் பெட்டிகளுக்கு விசேட பாதுகாப்பை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் சார்பாக இரண்டு பிரதிநிதிகளை அனுமதிப்பதற்கும் மற்றும் அங்கு விசேட பொலிஸ் பொலிஸ் பாதுகாப்பை வழங்கவும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.