Home செய்திகள் இ.போ.ச பேரூந்து மோதி முதியவர் பலி!

இ.போ.ச பேரூந்து மோதி முதியவர் பலி!

47
0

கிளிநொச்சியில் ஏ- 9 வீதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இன்று (23/07) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று மிதிவண்டியில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் ஒருவரை, மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர், உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உயிரிழந்த முதியவரின் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.