Home செய்திகள் இம்முறை தீர்க்கமான ஒரு முடிவை எடுங்கள்: நீதியரசர் விக்னேஸ்வரன்

இம்முறை தீர்க்கமான ஒரு முடிவை எடுங்கள்: நீதியரசர் விக்னேஸ்வரன்

102
0

நீங்கள் தெரிவுசெய்த இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் பலம்மிக்க எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தபோது தான் இங்கே எமது கோவில்கள் இடிக்கப்பட்டன. விகாரைகள் அமைக்கப்பட்டன. எமது நிலங்கள் பறிக்கப்பட்டன. சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டார்கள். அவரை நம்பினால் எதுவுமே கிடைக்காமல் போகும் என்பதோடு இன்னும் பலவற்றை தமிழர்கள் இழக்க நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் C.V.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை-மூன்றாம் கட்டை பகுதியில் நேற்று ((22/07) தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

இத்தனையும் நடைபெறும்போது அவர் இங்கு நின்றல்லவா போராடி இருந்திருக்க வேண்டும்? ஆனால் அவர் சென்றமுறை பதவிக்கு வந்த காலம் தொடக்கம் இன்று வரையில் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக இன்னல்களை ஏற்படுத்தி வந்துள்ளார்.

“இதுவரை காலமும் சம்பந்தன் ஒன்றுமே பெற்றுக் கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. மன்னிக்கலாம்.

ஆனால், தமிழர்களுக்கு இதோ ஒரு புதிய அரசியல் யாப்பு வருகிறது. அவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விடும் என்று கூறி சிங்கள அரசாங்கத்தைக் கோபமூட்டாமல் இருங்கள், உங்கள் பிரச்சினைகளை வெளிக்காட்டாதீர்கள் என்று தமது கட்சிக்காரரையும் தமிழ் மக்களையும் கட்டுப்படுத்தி வைத்த சம்பந்தன், இப்பொழுது மௌனம் சாதிக்கின்றார்.

அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தபோது சவால் விட வேண்டியவர் பதவி இழந்து வீட்டுக்கு வந்த பின் சவால் விடுகின்றார்.

எனவே, இம்முறை தீர்க்கமான ஒரு முடிவை எடுங்கள்.” என்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.