Home செய்திகள் நாம் தனி நாடு கேட்கவில்லை – தேரர்களின் கூற்று தேவையற்றது என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

நாம் தனி நாடு கேட்கவில்லை – தேரர்களின் கூற்று தேவையற்றது என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

85
0

சமாதானத்தின் உச்ச நிலையாக உள்ள பௌத்த சமயத் துறவிகள் ‘இரத்த ஆறு ஓடும்’ என்று கூறியுள்ளதன் மூலம் நாட்டில் பௌத்தம் எந்த நிலைக்குப் போய்விட்டது என்பதை எண்ணி கவலையடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. அகவே இந்தக் கருத்துக்கள் தேவையற்றவை என யாழில், இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் ‘இரத்த ஆறு ஓடும்’ என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத தேரர், கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.அத்துடன், சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு எனத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர்கள், அரசாங்கம் வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் பேசாமல் அமைதியாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்த நிலையிலேயே அதற்கு பதிலளிக்கும் முகமாக எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.