Home உலக செய்திகள் இந்தியாவில் – ஒரே நாளில் 40 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் – ஒரே நாளில் 40 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா!

87
0

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 40 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் புதிதாக 681 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ள நிலையில் இந்தியாவில் இதுவரையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27,497 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் மட்டும் புதிதாக 9,518 பேர் இந்த வைரசின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இதேபோல தமிழகத்தில் 4,979, கேரளாவில் 821, கர்நாடகாவில் 4,120, தெலுங்கானாவில் 1,296, ஆந்திராவில் 5,041, மேற்குவங்காளத்தில் 2,278, உத்தரபிரதேசத்தில் 2,211, பீகாரில் 1,433, டெல்லியில் 1,211, அசாமில் 1,081, குஜராத்தில் 965, ராஜஸ்தானில் 934, மத்தியபிரதேசத்தில் 837, ஒடிசாவில் 736, ஜம்மு காஷ்மீரில் 701, அரியானாவில் 617, பஞ்சாபில் 308, உத்தரகாண்டில் 239, திரிபுராவில் 224, ஜார்கண்டில் 193, சத்தீஸ்காரில் 174, கோவாவில் 173, புதுச்சேரியில் 105, அருணாசலபிரதேசத்தில் 90, மேகாலயாவில் 32, இமாசலபிரதேசத்தில் 26, மணிப்பூரில் 20, லடாக்கில் 19, சண்டிகாரில் 17, நாகாலாந்தில் 10, சிக்கிமில் 8, அந்தமான் நிகோபார் தீவில் 5, தாதர்நகர் ஹவேலியில் 3 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 18 ஆயிரத்து 43 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு ஒருபுறம் வேகமாக உயர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அந்த நோயில் இருந்து 7 லட்சம் பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 3 லட்சத்து 90 ஆயிரத்து 459 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் முதன் முதலில் கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்த மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.