Home செய்திகள் மயிலிட்டி மீன்பிடித் துறைக்கான எரிபொருள் உடன்படிக்கை கைச்சாத்து:

மயிலிட்டி மீன்பிடித் துறைக்கான எரிபொருள் உடன்படிக்கை கைச்சாத்து:

67
0

27 ஆண்டுகளின் பின் இராணுவ பிடிக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி மக்களின் முதன்மை வாழ்வாதாரமான மீன்பிடித்துறைக்கான எரிபொருள் உடன்படிக்கை ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கடல்தொழில் மற்றும் தீர் வள மைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெரும் முயற்சியினால் இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்திற்கும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.