Home செய்திகள் நாளை (21/07) முதல் 50% ஆக குறைகிறது பேரூந்து சேவை!

நாளை (21/07) முதல் 50% ஆக குறைகிறது பேரூந்து சேவை!

69
0

நாளை (21-07-2020) முதல் மக்களுக்கான பேரூந்து சேவையினை 50 வீதத்தால் குறைப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீயில் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் போக்குவரத்திற்கு பாவிக்கும் வாகன சேவைகள் அனைத்தும் மக்களை ஏற்றும் போது 50 வீதத்தினரை மட்டுமே ஏற்ற சுகாதார உத்தரவுகள்ஐ காரணம் காட்டி இலங்கை போகுவரத்து அமைச்சு உத்தரவிட்டிருந்தது.

இதனால் பெருதும் பாதிக்கப்பட்டிருந்த போகுவரத்து சேவையை நம்பி வாழும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கட்டண அதிகரிப்பு அல்லது அரச மானியம் வழங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை இன்று வரை அரசு ஏற்காதமையினாலேயே தாம் மேற்படி முடிவை எடுத்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் நாளை முதல் போக்குவரத்தில் மக்கள் பெரும் அசெளகரியங்களை சந்திக்க நேறிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.