Home முக்கிய செய்திகள் தேர்தலை நடாத்துவதில் புதிய சிக்கல்: தேர்தல் திணைக்களம்

தேர்தலை நடாத்துவதில் புதிய சிக்கல்: தேர்தல் திணைக்களம்

70
0

பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று முதல் கொரோனா தடுப்பு பணிகளிலிருந்து விலகியுள்ள நிலையில் அவர்கள் இன்றி தேர்தலை நடத்துவது சிக்கலானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் அதிகாரங்களை வழங்க முடியாது என கூறியுள்ள நிலையில் அது தொடர்பாக அதிருப்தியடைந்துள்ள சுகாதார பரிசோதகர்கள் இதுவரை காலம் தமது பங்களிப்பு மக்களை துன்பத்திற்குள் தள்ளும் வகையிலா இருந்தது என கேட்டு அவர்கள் அந்த பணிகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் இது எதிர்வரும் தேர்தலை நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும் எனவும், அவர்கள் இன்றி தேர்தலை நடத்த முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.