Home செய்திகள் தமிழ் மக்கள் விரும்புகின்ற தீர்வை ராஜபக்ஷ அரசாங்கம் ஒருபோது வழங்காது: கெஹலிய ரம்புக்வெல

தமிழ் மக்கள் விரும்புகின்ற தீர்வை ராஜபக்ஷ அரசாங்கம் ஒருபோது வழங்காது: கெஹலிய ரம்புக்வெல

656
0

தமிழ் மக்கள் விரும்புகின்ற தீர்வை ராஜபக்ஷ அரசாங்கம் ஒருபோது வழங்காது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

“தமிழர்களும் இந்த நாட்டின் பிரஜைகள். முஸ்லிம்களும் இந்த நாட்டின் பிரஜைகள். சிங்களவர்களும் இந்த நாட்டின் பிரஜைகள். எனவே, எமது புதிய ஆட்சியில் தமிழர்களுக்கெனத் தனியான அரசியல் தீர்வை எம்மால் வழங்க முடியாது.

தமிழ் மக்களோ அல்லது சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ விரும்புகின்ற தீர்வையும் எம்மால் வழங்க முடியாது.

தமிழ் – முஸ்லிம் – சிங்களம் என மூவின மக்களுக்கும் உரித்தான தீர்வை மட்டுமே எம்மால் வழங்க முடியும். நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு அங்கீகாரத்துடனேயே இந்தத் தீர்வை வழங்குவோம்.

‘அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வு’ என்று சம்பந்தன் கேட்பது சமஷ்டி தீர்வே. இந்த சமஷ்டி தீர்வுக்கு ராஜபக்ச அரசில் இடமேயில்லை” என்றார்.