Home தாயக செய்திகள் இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 2,687 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 2,687 ஆக உயர்வு!

50
0

இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளர்கனளின் மொத்த எண்ணிக்கை 2,687 ஆக உயர்வடைந்துள்ளது. 

கடந்த 6 நாட்களில் மட்டும் 233 பேர் புதிதாக கோவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய (16/07) தினம் 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை 669 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.