Home உலக செய்திகள் இந்தியாவில் – நேற்று (16/07) மட்டும் 32,695 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் – நேற்று (16/07) மட்டும் 32,695 பேருக்கு கொரோனா!

114
0

இந்தியாவில் நேற்று காலை வெளியிடப்பட்ட புள்ளிவிவர பட்டியலில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 32 ஆயிரத்து 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் தினந்தோறும் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களை வெளியிட்டு வரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

இதில் 80 சதவீதம் பேர், மராட்டியம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம், டெல்லி, தெலுங்கானா, மேற்குவங்காளம், மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களுடன் சேர்த்து, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 6 லட்சத்து 12 ஆயிரத்து 815 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். நாடு முழுவதும் இன்னும் 3 லட்சத்து 31 ஆயிரத்து 146 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் புதிதாக 606 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.