Home செய்திகள் நூற்றுக்கு மேற்பட்ட ஆயுதங்களுடன் 166 பேர் கைது:

நூற்றுக்கு மேற்பட்ட ஆயுதங்களுடன் 166 பேர் கைது:

48
0

நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் 166 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 40 நாட்களில் தொடர்ச்சியாக நாடுமுழுவதும் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு பெருமளவான ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கை பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், குற்ற புலனாய்வுப் பிரிவினரும் நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே 129 துப்பாக்கிகள், 7 கைத்துப்பாக்கிகள், 838 தோட்டாக்கள், 22 கைக்குண்டுகள், 7 வாள்கள், 3 கத்திகள், 23 டிக்னேரர்கள் மற்றும் ஒரு தொகை வெடி மருந்தும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 15,12 பேரையும், வெவ்வேறூ குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 28,329 பேரையும் கடந்த 40 நாட்களில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.