Home செய்திகள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை இடை நிறுத்தம்:

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை இடை நிறுத்தம்:

5
0

இலங்கை பணியாளர்களை வெளிநாடுகளிலிருந்து அழைத்துவரும் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தும் நிலையங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக அவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இடைநிறுத்தவுள்ளதாகவும், நிலைமை வழமைக்கு திரும்பிய பின்னர் அவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.