Home தாயக செய்திகள் 25 ஆண்டுகள் கழித்து 147 பேரின் படுகொலையை பொறுப்பேற்றார் சந்திரிகா!

25 ஆண்டுகள் கழித்து 147 பேரின் படுகொலையை பொறுப்பேற்றார் சந்திரிகா!

6
0

யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல் தவறுதலாக நடந்தது என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்வதைத் தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் யாழ். குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருந்த வேளை அத் தேவாலயம் சிறீலங்கா மீது விமானப் படையினர் 1995ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி நடத்தியிய தாக்குதலில் 147 பேர் கோரமாக கொல்லப்பட்டிருந்தனர்.

அந்த நிகழ்வையை 25 ஆண்டுகள் கழித்து தற்போது பொறுப்பேற்றுள்ள அப்போதைய ஆட்சியாளரான சந்திரிகா, அது தவறுதலாக நடந்ததாகவும், அதில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவது அடிப்படை உரிமை என்றும் அதை தடுக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

அதில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் நிகழ்வுக்கு தடை விதிக்குமாறு கோரி மானிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்தனர். எனினும் அது நிராகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சந்திரிகா “நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் தவறுதலாகவே குண்டு வீச்சு நடத்தினர். விமானப் படையினரின் இலக்காக தேவாலயம் இருக்கவில்லை.அந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கேள்விப்பட்டதுமே விமானப் படையினரைக் கண்டித்தேன். உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது அடிப்படை உரிமை. அதை யாரும் தடுக்கக் கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.