Home செய்திகள் 18 மாடுகளை வேண்டுமென்றே மோதிக் கொன்ற டிப்பர் சாரதி!

18 மாடுகளை வேண்டுமென்றே மோதிக் கொன்ற டிப்பர் சாரதி!

44
0

கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் டிப்பர் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழந்துள்ளன.

இன்று (09/07) வியாழக்கிழமை அதிகாலை விசுவமடு பகுதியில் இருந்து வேகமாக வந்த டிப்பர் வாகனம், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மாடுகளை வேண்டுமென்றே மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விபத்தினை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாடுகள் வீதியில் மெதுவாக நடப்பதைக் கண்டும் அதற்கு கோர்ண் அடித்து விரட்டவோ, அன்றி வேகத்தை குறைக்கவோ இல்லை என்றும், வேண்டுமென்றே மாடுகளை கொன்ற குறித்த டிப்பர் சாரதியை கைது செய்து தண்டிப்பதோடு, நட்ட ஈட்டையும் பெற்றுத் தரவேண்டும் எனவும் மக்கள் கோரியுள்ளனர்.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கால்நடை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பயிர்ச்செய்கைக்கு உட்படாத பகுதியான வெலிக்கண்டல் பகுதியில் வைத்து பராமரித்து வருகின்ற நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.