Home செய்திகள் யாழ் செயலக வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் ஆயுதங்களுடன் கைது!

யாழ் செயலக வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் ஆயுதங்களுடன் கைது!

32
0

யாழ்ப்பாண மாவட்ட செயலக முன்பாக சுற்றுச்சூழல் அதிகார சபை உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐந்து பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய – குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரின் நடவடிக்கையின் போதே, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மல்லாகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து இரு வாள்கள், கைக்கோடரி ஒன்று, இரு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மல்லாகம் கனி எனப்படும் குழுவை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்தவரும் முன்னர் அந்தக் குழுவில் இருந்துள்ளதாக பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்படுகிறது.