
யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக செயலக உத்தியோகத்தர் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை (08/07/2020) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இன்று காலை தேசிய கீதம் இசைப்பதற்கு சற்று முன்னர் அலுவலகத்திற்கு வந்த குறித்த உத்தியோகத்தர் மாவட்ட செயலக நுழைவாயில் நின்றிருந்த போதே இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரில் இருவரே வாளால் வெட்டியுள்ளனர்.
பின்னர், உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் என நினைத்து வேறு ஒரு நபரின் மோட்டார் சைக்கிளை வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிய வேளையில் சந்தேகநபர்களில் ஒருவர் அவரது பணப்பை (பேஸ்) சம்பவ இடத்தில் தவறவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.