
ஒரு மரத்தில் குருவிச்சை இருப்பதை கண்டால் அந்த குருவிச்சையை மட்டும் வெட்டுங்கள். மரத்தையே வெட்டுவது தவறு. அப்படி மரத்தை வெட்டிவிடாதீர்கள். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று அவர் ஊடகங்கள் முன்னிலையில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதாவது கூட்டமைப்பு என்ற மரத்தில் குருவிச்சையாக இனம் காணப்பட்டுள்ள சுமந்திரனை மட்டும் தூக்கி விட்டு ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு ஆதரவு வழங்குங்கள் என மறைமுகமாக கூறியுள்ளார் சரவணபவன்.
அவர் மேளும் கூறுகையில்,
இம் முறை தேர்தலில் கூட்டமைப்பு 7 ஆசனங்களை பெறும் என தான் திடமாக நம்புவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு “புலி நீக்க” அரசியலை செய்யவில்லை. சிலரது கருத்துக்களும், சில நடைமுறைகளும் அப்படியான ஒரு எண்ணத்தை கொண்டுவந்துவிட்டது. அது எல்லோராலும் அல்ல. அதை செய்தது ஒருவர் மாத்திரமே. ஆகவே மரத்தில் உள்ள குரிவிச்சையை மட்டும் வெட்டுங்கள் என கேடுக்கொள்கிறேன் என்றார்.