Home செய்திகள் யாழில் மூவர் பொலிஸாரால் கைது!

யாழில் மூவர் பொலிஸாரால் கைது!

42
0

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை பொலிசா் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை சந்தேகத்துக்கிடமான முறையில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் மூன்று இளைஞர்கள் நடமாடியுள்ளனர். இவர்களைப் பொலிஸார் விசாரணை செய்த போது முன்னுக்குப் பின்முரணான தகவல்களைப் பொலிஸாருக்கு வழங்கியதை அடுத்தே, அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.