Home செய்திகள் மண்டப நிகழ்வுகளுக்கு 300 பேர் வரை அனுமதி:

மண்டப நிகழ்வுகளுக்கு 300 பேர் வரை அனுமதி:

63
0

திருமண மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையில் 50 சதவீதம் அல்லது ஆகக்கூடியது 300 பேருக்கு (மணமகன், மணமகள், உட்பட மண்டபத்திற்குள் நிற்கும் அனைவரும் அடங்கலாக) திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்கு நேற்று ((07/06) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.

அதேவேளை, திருமண வைபவத்தில் கலந்து கொள்வவோருக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளியை கடைபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், மண்டபங்களில் கலந்துகொள்வதற்காக இதற்கு முன்னர் வழங்கிய ஆலோசனைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும், அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.