Home முக்கிய செய்திகள் தென்னிலங்கையில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

தென்னிலங்கையில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

143
0

பன்னிபிட்டிய, நியதகல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதங்களுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த நபரிடன் வீட்டில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வீட்டின் மேல் பகுதியில் நாட்டப்பட்டிருந்த கஞ்சா செடிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த ´ககன´ எனும் நபருடன் தொடர்பில் இருந்த சரத் ஏக்கநாயக்க எனும் ´மஹரகம புபுலா´ என்பவரையே இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இன்று (07/07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்..