Home உலக செய்திகள் திருச்சியில் 14 வயதுச் சிறுமி எரித்துக் கொலை!

திருச்சியில் 14 வயதுச் சிறுமி எரித்துக் கொலை!

69
0

தமிழகத்தில் 14 வயது சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையின் அதவத்தூர் பாளையத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கங்கா தேவி என்ற 14 வயது சிறுமியே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

மாணவியின் சடலத்திற்கு அருகே தீப்பெட்டி, பெட்ரோல் என அனைத்தும் இருந்துள்ளது. எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக இருக்கும் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். மேலும், சில தினங்களுக்கு முன்பு 7 வயது சிறுமி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், தற்போது சிறுமி ஒருவர் இப்படி இறந்து கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.