
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட எவரையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதித்திருந்தார்.
தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுவர் படையினர் என்று கூறி விளம்பரப்படுத்தப்படும் ஒளிப்படங்கள் உண்மையானவை அல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பு சிறுவர்களை ஒருபோதும் வீரர்களாக பயன்படுத்தவில்லை எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.