
இவ்வருட இறுதிக்குள் மாகாணா சபைத் தேர்தல் நடாத்தப்படும் என ஆளும் கட்சியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்கு முறமை நீக்கப்பட்டு முரண்பாடற்ற தேர்தல் முறமை தமது புதிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர், வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர் வரும் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும் பான்மையுடன் தமது கட்சி பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.