Home செய்திகள் நீர்வேலியில் – டிப்பரில் நசியுண்டு இளைஞன் பலி!

நீர்வேலியில் – டிப்பரில் நசியுண்டு இளைஞன் பலி!

68
0

யாழ் நீர்வேலி பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் கராச்சில் டிப்பர் வாகனம் பழுது பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் மீது டிப்பர் வாகனத்தின் சுமை பெட்டி விழுந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞனே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமை பெட்டியை ஜக் மூலம் தூக்கிவிட்டு அதன் கீழிருந்து பழுது பார்த்துக் கொண்டிருந்தபோதே ஜக் நழுவி சுமைப்பெட்டி இளைஞன் மீது வீழ்ந்ததில் குறித்த இளைஞன் பலியாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.