Home முக்கிய செய்திகள் சரணடைந்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவு பிரப்பிக்கப்பட்டிருந்தது: பொன்சேகா

சரணடைந்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவு பிரப்பிக்கப்பட்டிருந்தது: பொன்சேகா

64
0

சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவு வழங்கப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் எவரும் சரணடையவில்லையென இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ள நிலையில் அதற்கு பதிலளிக்கையிலேயே இதனை சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும் இறுதி யுத்ததின் இறுதிக் கணங்களின் போது அவ்வாறு உத்தரவிட்ட ஒலிப்பதிவு தன்னிடமிருப்பதாகவும் தேவையேற்படின் அதனை வெளியிட தயாராக இருப்பதாகவும் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

எனினும், அவ்வாறு யார் உத்தரவிட்டார் என்பதை அவர் வெளியிடவில்லை.