
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இன்று (01/07) காலை தொடரூந்துடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் தொடரூந்து கடவையின் ஊடாக கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டியினை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்து மோதித்தள்ளியுள்ளது.
தொடரூந்து வருவதற்குள் வீதியை கடந்துவிட தீர்மானித்த முச்சக்கர வண்டியினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.