Home செய்திகள் கருணாவிற்கு பிரத்தியேக பொது மன்னிப்பு இல்லை. அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரர்:

கருணாவிற்கு பிரத்தியேக பொது மன்னிப்பு இல்லை. அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரர்:

37
0

கருணா அம்மான் வெளியிட்ட கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் தவறு உள்ளது. அது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன. என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்று அலரி மாளிகையில் இடம்பெற்றபோது, கருணா அம்மானுக்கு அரச பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என, அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு பிரத்தியேகமாக பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை. பொதுவாக முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் அவரும் உள்ளடங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட ஊடகவியலாளர் ஒருவர், அதே போன்று முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் கீழ் ஏன் அரசியல் கைதிகளையும் விடுவிக்க முடியாது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர், விடுவிக்க முடியாத குற்றவியல் தொடர்புடைய பலர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுள் உள்ளடங்குவதால் அவர்களை உடனடியாக பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.