
சுவிற்சர்லாந்தில் – வடமராட்சி பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாயாருவர் உயிரிழந்துள்ளார்.
சுவிற்சர்லாந்து பேர்ண் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த வடமராட்சி பொலிகண்டியைச் சேர்ந்த சுதா பிறேம்ராஜ் (39) என்ற இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
இவர் மூளை நரம்பு வெடித்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை (23/06) அன்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
குறித்த பெண் நல்ல ஆரோக்கியமாக இருந்துவந்ததாகவும், சம்பவ தினத்தன்று திடீரென மயக்கமடைந்ததை அடுத்தே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.