
தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் செலவுகளுக்காக 81 வயது முதியவர் ஒரு இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தேர்தல் செலவுகளுக்கு நிதி உதவி செய்யுமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்த வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த யாழ்/இணுவிலைச் சேர்ந்த தமிழினப் பற்றாளனான திரு.மகாலிங்கம் அவர்களே தனது சேமிப்பில் இருந்து ரூபா ஒருலட்சத்து ஓராயிரத்தை நீதியரசரின் இல்லம் தேடி சென்று நேற்று (23/06) செய்வாய்க்கிழமை காலை கையளித்துள்ளார்.
முதியவரின் இந்த உதவி மக்களுக்கான தனது அரசியல் செயற்பாடுகளின் பொறுப்பு கூறலை மிகவும் ஆழமான முறையில் உணர்த்தியுள்ளதாக விக்னேஸ்வரன் அவர்கள் கூறியுள்ளார்.
மிகவும் பொறுப்பான முறையில் இந்த பணம் செலவிடப்படும் என்றும் அவரது எதிர்பார்ப்புக்கள் வீண்போகாது என்றும் மகாலிங்கம் அவர்களுக்கு தனது நன்றிகளை அவர் தெரிவித்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.