
புதுக்குடியிருப்பு மாற்றத்துக்கான இளையோர் அணி முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
புதுக்குடியிருப்பில் நேற்று (21/06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட புதுக்குடியிருப்பு மாற்றத்துக்கான இளையோர் அணி 4 ஆசனங்களை பெற்றுக்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.