Home செய்திகள் வல்வெட்டித்துறையில் திடீர் சுற்றிவளைப்பு – இருவர் கைது!

வல்வெட்டித்துறையில் திடீர் சுற்றிவளைப்பு – இருவர் கைது!

59
0

வல்வெட்டித்துறையில் இன்று அதிகாலை 4.30 மணி முதல் காலை 7.30 மணிவரை இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.

கெருடாவில் – சீலாப்புலம் பகுதியில் ஊரணி இராணுவ முகாம் படையினரும், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த இந்தத் தேடுதலில் சுமார் 40 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலின் போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர் என்று வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை, கொம்மாந்துறையில் கடந்த வாரம் கிணறு ஒன்றிலிருந்து 3 குண்டுகள் உட்பட துப்பாக்கியும் மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே இச் சுற்றிவளைப்பு தேஉதல் இடம்பெற்றதாக நம்பப்படுகிறது.