Home தாயக செய்திகள் நயினை நாகபூசனி ஆலயத்திற்குள் பாதணிகளுடன் உள் நுளைந்த படையினர்:

நயினை நாகபூசனி ஆலயத்திற்குள் பாதணிகளுடன் உள் நுளைந்த படையினர்:

46
0

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் ஆலயத்துக்குள் பொலிஸார் மற்றும் கடற்படையினர் காலணியுடன் கடமையில் நின்றமை தொடர்பில் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

கொரோனோ காரணமாக நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் மட்டுமே ஆலயத்தினுள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அம்மனின் கொடியேற்ற நிகழ்வை நேரில் கண்டுகழிக்க வந்திருந்த பலரும் ஆலய வெளி வீதியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். வயது வேறுபாடின்றி பலரும் வெயிலில் கால் கடுக்க காத்திருந்தும் பொலிஸார் ஆலய வளாகத்தினுள் உள் நுழைய எவருக்கும் அனுமதி வழங்கவில்லை.

பாதணிகளுடன் ஆலயத்திற்குள் உள் நுளைய வேண்டாம் என பலரும் படையினருக்கு அறிவுறுத்திய போதும் அதை பொருட்படுத்தாது பாதணிகளுடன் ஆலயத்திற்குள் கடற்படையினரும், காவல்துறையினரும் தொடர்ந்தும் ஆலயத்திற்குள் நின்றூள்ளனர்.

இந்நிலையில் ஆலய வளாகத்தினுள் பொலிஸாரும் கடற்படையினரும் காலணிகளுடன் கடமையில் இருந்தமை தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு கடுமையாக பலரும் எதிர்த்து வருகின்றனர்.