Home தாயக செய்திகள் வவுனியாவில் 10 கொரோனா நோயாளர் இனம்காணப்பட்டனர்!

வவுனியாவில் 10 கொரோனா நோயாளர் இனம்காணப்பட்டனர்!

61
0

கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகிய 10 பேர் வவுனியாவில் இனம்காணப்பட்டுள்ளனர்.

டுபாயில் இருந்து நாடுதிருப்பிய நிலையில் – வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் உட்பட 10 பேருக்கே கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கர்ப்பிணிப் பெண்ணை முல்லேரியா கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கும், ஏனைய 9 பேரையும் காத்தான்குடியில் உள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கும் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.