
பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பயணம் செய்த வாகனம் மீது அவருக்கு பாதுகாப்பிற்கு சென்ற வாகனம் மோதியதால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாகனத்தின் பின் புறம் சேதத்திற்கு உள்ளான போதும் பிரதமர் உள்பட எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
நேற்றைய தினம் (17/06) வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்திற்கு முன்பாக குர்திஷ் ஆதரவு குழுக்கள், பிரக்சிட் எதிர்ப்பு குழுக்கள் என மிகக் குறைவானோரின் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அவ் வேளை பாராளுமன்றத்தில் இருந்து டவுன் வீதியில் உள்ள தனது அலுவலகத்திற்கு மகிழுந்தில் புறப்பட்டார் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜான்சனின் கார் வெஸ்மினிஸ்டர் வாளாகத்தை விட்டு வெளியே வந்தபோது அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்களில் ஒருவர் திடீரென பிரதமரின் வாகனத்திற்கு முன் வந்து நின்றதால் பிரதமரின் வாகன ஓட்டுநர் சடுதியாக நிறுதியுள்ளார்.
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த பாதுகாப்பு படையினரின் வாகனம் எதிர்பாராத விதமாக பிரதமரின் மகிழுந்தின் மீது வேகமாக மோதியபோதே குறித்த விபத்து நடந்துள்ளது.
இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் பிரதமர் சென்ற மகிழுந்தை இடைமறித்து விபத்து ஏற்பட காரணமாக இருந்த அந்த போராட்டக்காரரை கைது செய்துள்ளர்.
