
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1924 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 23 முகாம்களில் 2700 க்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை படையினரும், வெளிநாடுகளில் இருந்து அண்மையில் நாடு திரும்பியவர்களுமாவர்.
இது வரை இலங்கையில் 11 பேர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.