Home உலக செய்திகள் கொரோனாவின் மறு எழுச்சி – தினமும் 1 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு!

கொரோனாவின் மறு எழுச்சி – தினமும் 1 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு!

72
0

தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று நோய் கடந்த 2 வாரங்களாக மீண்டும் வீரியம் கொண்டு அதிக உயிர்களை காவு கொள்வதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.. 

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 8,148,164 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 439,835 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிதாக 1 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் கூறுகையில், தொடக்கத்தில் வைரஸ் 1 இலட்சம் பேருக்கு பரவ இரண்டு மாதங்களுக்கு மேலானது. ஆனால் தற்போது கடந்த இரண்டு வாரங்களாக தினமும் 1 இலட்சம் பேருக்கு வைரஸ் பரவுகிறது. குறிப்பாக தெற்கு ஆசியா மற்றும் அமெரிக்காவில் வைரஸ் பரவும் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. 

குறித்த வைரஸ் மறு எழுச்சி பெற்று ஏனைய நாடுகளையும் மறுபடி தாக்கலாம் என்பதால் உலக நாடுகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.