Home செய்திகள் த.தே.ம.மு யின் வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்:

த.தே.ம.மு யின் வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்:

156
0

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (14/06) மாலை அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நல்லூர் இளம் கலைஞர் மன்ற மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் அதற்கான பரப்புரைகள் குறித்தும் அக் கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டதோடு, தற்போதைய கொரோனா அச்ச சூழலில் சுகாதார வழிவகைகளுடன் தடைகள ஏற்படா வண்ணம் சந்திப்புக்களை மேற்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.