Home செய்திகள் கொள்ளுப்பிட்டி சம்பவம் – தேர்தல் காலத்தில் அரசியலாக்க வேண்டாம் என மன்றாடும் மஹிந்த:

கொள்ளுப்பிட்டி சம்பவம் – தேர்தல் காலத்தில் அரசியலாக்க வேண்டாம் என மன்றாடும் மஹிந்த:

43
0

கொழும்பில் – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதலை வைத்து தற்போதைய தேர்தல் காலத்தில், அரசியல் இலாபம் தேட முயற்சிக்க வேண்டாம் என்று எதிரணியிடம் நாம் வேண்டிக்கொள்கின்றோம்.” என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட் அந்நாட்டுப் பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக கொழும்பு – கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது பொலிஸார் மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்ததைக் கண்டித்து எதிரணி அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வரும் நிலையிலேயே பிரதமர் மஹிந்த மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த சம்பவம் தேர்தலில் தற்போதைய மஹிந்த குளாம் ஆட்சிக்கு பாரிய பின்னடைவை கொடுக்கும் என அஞ்சியுள்ள அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதலை நாம் நியாயப்படுத்தவில்லை. அதற்கு எதிரான கண்டனங்கள் அமைச்சரவைக் கூட்டத்திலும் முன்வைக்கப்பட்டன. ஆனால், நீதிமன்றத்தின் தடையுத்தரவு இருக்கின்றபோது அந்த உத்தரவையும் சுகாதார விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை தவறாகும். இதை உணர்ந்துகொண்டும் உணராத வகையில் எதிரணியினர் கருத்துக்களை வெளியிடுவது கவலையளிக்கின்றது எனவும் குறுிப்பிட்டுள்ளார்.