Home முக்கிய செய்திகள் ஊரடங்கு நடைமுறையில் நேரக் குறைப்பு:

ஊரடங்கு நடைமுறையில் நேரக் குறைப்பு:

76
0

நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்ட நடைமுறைகளில் மேலும் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

அதற்கமைய இன்று (14/06) முதல் தினந்தோறும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் செயற்பாடுகளை தடையில்லாமல் நடத்தில் செல்லல் மற்றும் மக்களின் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இவ்வாறு தளர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும் சுகாதார அதிகாரிகள் வழங்கும் சுகாதார அறிவுறுத்தல்களை முறையாகவும், தொடர்ந்தும் கடைபிடிக்குமாறு அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.