Home செய்திகள் மாயைக்குள் சிக்கவைக்கும் மஹிந்தவின் சூழ்சி!

மாயைக்குள் சிக்கவைக்கும் மஹிந்தவின் சூழ்சி!

78
0

சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியும் நானும் ஆராய்ந்து வருகின்றோம். அந்தவகையில் விடுவிக்கக்கூடிய கைதிகளை விரைந்து விடுவிப்போம். என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தமது ஆட்ட்சியை நிலை நாட்ட தமிழர்களின் வாக்குகளை அபகரிக்கும் நோக்கோடு இந்த மாய வலையை மஹிந்த குளாம் விரித்துள்ளது.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பிலும் கலந்துரையாடினோம். தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் புரிந்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள்.

குறித்த பேச்சுவார்த்தையில் நான் (மஹிந்த) கேட்டுக்கொண்டமைக்கமைய சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல் பின்னர் கிடைக்கப் பெற்றது. இந்த விவகாரத்தை நீதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளோம். மேலும் சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியும் நானும் ஆராய்ந்து வருகின்றோம். ஆகவே தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் புரிந்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.