Home செய்திகள் இயக்கச்சியில், பார ஊர்திகளை மறித்து வீதி மறியல் போராட்டத்தில் குதித்த மக்கள்!

இயக்கச்சியில், பார ஊர்திகளை மறித்து வீதி மறியல் போராட்டத்தில் குதித்த மக்கள்!

58
0

இயக்கச்சி – கொற்றாண்டகுளம் பிரதேச மக்கள் பார ஊர்திகளை மறித்து வீதி மறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணியளவில் கொற்றாண்டகுளம் பிரதேச மக்களால் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கட்டைக்காடு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக கிரவல் ஏற்றிச் சென்ற பார ஊர்திகள் பாலத்தின் ஊடாக கிரவல் எடுத்துச் செல்வதினால் பாலம் சேதமடைந்து வருவதாகவும் தமது பிரதேசத்திற்கான குறித்த வீதியால் போக்குவரத்துச் செய்யமுடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தே பார ஊர்திகள்  மறிக்கப்பட்டு குறித்த மறியல் போராட்டம் இன்று இடம்பெற்றது.

இதனால், அப்பகுதிக்குச் சென்ற பளை பொலிஸார் பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுடன் நீண்டநேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அபிவிருத்தி இடம்பெறும் பகுதிக்கு கிரவல் எடுத்துச் செல்வதற்கு மாற்று பாதையைப் பயன்படுத்துவதாக இணக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.