Home செய்திகள் 4 கட்டங்களாக கல்வி நடவடிக்கை ஆரம்பம்: கல்வி அமைச்சு

4 கட்டங்களாக கல்வி நடவடிக்கை ஆரம்பம்: கல்வி அமைச்சு

34
0

அனைத்து அரசு பாடசாலைகளும் நான்கு கட்டங்களாக மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஜூன் 29ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக முதல் கட்டமாக பாடசாலை திறக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள கல்வி அமைச்சு – ஜூலை மாதம் 6ம் திகதி தரம் 5 (புலமைப் பரீட்சை) தரம் 11(சா.த) மற்றும் தரம் 13 (உ.த) ஆகிய மாணவர்களுக்காக 2ஆம் கட்டமாக பாடசாலை திறக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

மூன்றாம் கட்டமாக ஜூலை மாதம் 20ஆம் திகதி தரம்10 மற்றும் தரம் 12 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளன. 

அதேபோல் நான்காம் கட்டமாக முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களை தவிர்ந்த 3, 4, 6, 7, 8,மற்றும் 9 தர மாணவர்களுக்காக பாடசாலை ஜுலை மாதம் 27 ஆம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.