Home செய்திகள் உயர் தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் செப்ரம்பரில்:

உயர் தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் செப்ரம்பரில்:

65
0

க.பொ.த உயர்தரப் பரீட்சையை செப்டம்பர் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையை செப்டம்பர் 13ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்காக பாடசாலைகளை எதிர்வரும் ஜுலை 6ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.