Home உலக செய்திகள் இந்தியாவில் ஒரே நாளில் 331 பேர் மரணம்!

இந்தியாவில் ஒரே நாளில் 331 பேர் மரணம்!

56
0

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. 

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் 9987 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 331 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7466 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 266,598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.