Home செய்திகள் 10 வாரங்களின் பின் வடபகுதிக்கான தொடரூந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்:

10 வாரங்களின் பின் வடபகுதிக்கான தொடரூந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்:

62
0

கடந்த மார்ச் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த வடபகுதிக்கான புகையிரத சேவைகள் இன்று (08/06) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 5.45 மணிக்கு கொழும்பிற்கான முதலாவது சேவையும் இரண்டாவது சேவை 9. 45 மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

எனினும் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.புகையிரநிலையத்திக்குள் நுழையும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனது பயணத்தை தொடர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ள யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் புகையிரதத்தில் பயணம் செய்ய விரும்புவோர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தமது ஆசனமுன் பதிவுகள் மேற்கொள்ளுமாறும், கேட்டுக்கொண்டுள்ளார்.