Home செய்திகள் படையினரின் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் இடம்பெறும் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் பொங்கல் உற்சவம்:

படையினரின் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் இடம்பெறும் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் பொங்கல் உற்சவம்:

84
0

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றய தினம் (08/06) அதிகாலை மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு சிறப்புற ஆரம்பமானது.

இந்நிலையில் ஆலயத்தை சூழ இராணுவத்த்தினர் குவிக்கப்பட்டுm, நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதோடு, வீதித் தடைகள் போட்டு ஆலயத்திற்கு வருபவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்த போதும், ஆலயத்துக்கு வருகைதந்த பக்தர்களுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டு மக்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 01.06.2020 அன்று உப்பு நீரில் விளக்கெரிப்பதற்காக முல்லைத்தீவு சிலாவத்தை கடற்கரையில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, ஏழு நாட்களாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் விளக்ககெரிக்கப்பட்டு வரும் அற்புத காட்சி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்று. இன்று அதிகாலை அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உட்சவம் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.