இரணைமடுவில் அமைந்துள்ள சிறீலங்கா விமானப்படையினரின் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினரில் ஒரு தொகுதியினர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நோத்தொற்றுக்கு உள்ளானோர் எனும் சந்தேகத்தில் கடந்த மாதம் 20ம் திகதி வெலிசற கடற்படை முகாமில் இருந்து அழைத்துவரப்பட்டு வடமாகாணம் – இரணைமடுவில் அமைந்துள்ள சிறீலங்கா விமானப்படையினரின் முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 167 பேரில் PCR பரிசோதனை செய்யப்பட்டு நோய்த் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட 70 கடற்படையினரே இவ்வாறு இன்று (06/06) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
