Home தாயக செய்திகள் தியாகி பொன் சிவகுமாரனுக்கு 6ம் திகதி உரும்பிராயில் அஞ்சலி:

தியாகி பொன் சிவகுமாரனுக்கு 6ம் திகதி உரும்பிராயில் அஞ்சலி:

153
0

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தான தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவு தினம் இம்முறை மறு நாளான 6ம் திகதி நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

இந்றும் நாளையும் இலங்கை முழுவது ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காரணத்தால் பொன் சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவு நாளான நாளை (05.06.2020) நிகழ்வுகளை நடத்த முடியாத காரணத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவரின் சொந்த ஊரான உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுச் சிலை முன்பாக நடைபெற ஏற்பாடாகி உள்ள நிகழ்வில் மக்களை சட்ட ஒழுங்குகளையும், சுகாதார நடைமுறைகளையும் பின் பற்றி வந்து கலந்துகொண்டு தியாகி பொன் சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழர்களின் கல்வியை சிதைக்கும் கல்வித் தரப்படுத்தல் மற்றும் தமிழின அடக்குமுறைக்கு எதிராக முதன் முதலில் மாணவர் இயக்கத்தை உருவாக்கி சிங்கள ஆட்சியாளர்களுக்கும், அடக்குமுறையாளர்களுக்கும் எதிராக போராட ஆரம்பித்தவத்தவரே பொன்னுத்துரை சிவகுமாரன் எனும் (பொன் சிவகுமாரன்) ஆவார்.

1950 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 26ம் திகதி யாழ்/உரும்பிராயில் பிறந்து கல்வியிலும், நல் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய சிவகுமாரன் இளவயதிலேயே விடுதலைத் தாகத்தோடு போராடி தனது 23வது வயதில் இராணுவம், மற்றும் பொலிசாரின் சுற்றிவளைப்பில் அகப்பட்டு காயமடைந்த போது தான் அவர்களிடம் அகப்படக்கூடாது எனும் கொள்கையோடு சயனைட் அருந்தி உயிர் துறந்த முதல் வீரன் ஆவார்.

சிவகுமாரன் தலைமையில் இருந்த மாணவர் இஅயக்கத்தில் இருந்த இன்னுமோர் இளைஞ்ஞனே பின் நாட்களில் உலகம் வியக்கும் மாபெரும் விடுதலைப் போராட்ட அமைப்பாக திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும், தமிழர்களின் தேசியத் தலைவருமாக இருந்த மேதகு.வே.பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.